விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகர் - சம்பவ இடத்திலேயே தந்தை பலி
கார் விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்துள்ளார்.
ஷைன் டாம் சாக்கோ
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ(41).
பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார்.
சமீபத்தில் கொச்சியில் உள்ள தங்கும் விடுதியில், போதைப்பொருள் தொடர்பாக காவல்துறையினர் சோதனை நடத்திய போது, அங்கு தங்கியிருந்த ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தந்தை உயிரிழப்பு இந்நிலையில், இன்று காலை அவர் தனது குடும்பத்தினருடன் எர்னாகுளத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற போது, தருமபுரி அருகே காலை 7 மணியளவில் கார் லாரி மீது மோதி விபத்தை சந்தித்துள்ளது.
இந்த விபத்தில், ஷைனின் தந்தை சிபி சாக்கோ(70) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஷைன் அவரது தாய், சகோதரர் உள்ளிட்டோர் தற்போது தர்மபுரியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவரின் தாய் மற்றும் சகோதரர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், ஷைனின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |