அந்த 35 நிமிடங்கள்.. முதல் முறையாக நடிகர் புனித் மறைவு குறித்து அவரது சகோதரர் நெகிழ்ச்சி பதிவு
நடிகர் புனித் ராஜ் குமார் குறித்து அவரது சகோதரன் சிவராஜ்குமார் தெரிவித்த பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கன்னடாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார்(46). இவருக்கு சமூகவலைத்தளங்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் திகதி யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென மரணம் அடைந்தார்.
அவரது மரணச் செய்தி இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் புனித் குறித்து அவரது அண்ணன் சிவராஜ்குமார் தெரிவித்த கருத்து ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
அதில், உடல்நிலை சரியில்லை என்றதும் புனித்தை மருத்துவமனை அழைத்து சென்றோம். கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் ஆனது. ஆனால் அருகிலேயே 5 நிமிட தூரத்தில் இருந்த மருத்துவமனையை நாங்கள் தவறவிட்டோம்.
ஒருவேளை அந்த மருத்துவமனையில் சேர்த்திருந்தால் புனித் உயிர் பிழைத்திருக்கக் கூட வாய்ப்பிருக்கலாம் என தோன்றுகிறது எனக் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் கண்கள் தானமாக பெறப்பட்டு, அவரது 2 கண்கள் மூலமாக நவீன மருத்துவ உதவியுடன் 4 பேருக்கு பார்வை கிடைத்தது. இதையடுத்து ஆயிரக்கணக்காக ரசிகர்கள் அவரை போல கண்தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.