சாய்னா குறித்து நடிகர் சித்தார்த் சர்ச்சை கருத்து! பொலிஸ் விசாரணையில் நடந்தது என்ன? முழு விவரம்
சாய்னா நேவால் விவகாரத்தில் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டுள்ளதாக தேர்கள் வெளியாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சித்தார்த். தான் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவது மட்டுமன்றி, அரசியல் ரீதியான கருத்துகளையும் துணிச்சலாக வெளியிட்டு வருகிறார். சில சமயங்களில் சித்தார்த் தனது ட்வீட்களின் மூலம் சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு.
அந்த வகையில் சமீபத்தில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண் ஊடகவியலாளர் குறித்து ட்விட்டரில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
அதனையடுத்து சித்தார்த்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அவரிடம் விசாரணை நடத்துமாறு தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் நடிகர் சித்தார்த்துக்கு சென்னை மாநகர போலீஸ் சம்மன் அனுப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் அளித்த நடிகர் சித்தார்த், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்கும், பெண் ஊடகவியலாளர் குறித்து அவதூறாக பேசியதற்கும் விசாரணையில் மன்னிப்புக் கேட்பதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் எனது மன்னிப்பை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.