நடிகர் சிம்பு மீண்டும் குண்டாகலாம்! உடல் எடை குறைப்பு ரகசியத்தை உடைத்த பப்லு
பிரபல நடிகரான பப்லூ ப்ரித்திவிராஜ் நடிகர் சிம்பு உடலை எடை குறைப்பு குறித்து பேசியுள்ளது, ரசிகர்களிடையே ஒரு வித சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் சிலம்பரசன். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இதனால் அவர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ரசிகர்கள் உட்பட பலரும் கூறி வந்தனர்.
அதே போன்று சிம்புவும் இப்போது உடல் எடை குறைத்து பலரையும் ஆச்சரியப்படும் அளவிற்கு மாறி வந்துவிட்டார். அவர் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் மாநாடு படமும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகரான பப்லூ ப்ரித்திவிராஜ் சமீபத்தில், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், அவரிடம் நடிகர் சிம்பு உடல் குறைப்பு குறித்து கேட்ட போது, அவர் எப்படி உடல் எடையை குறைத்தார் என்பது தெரியவில்லை.
நேர் வழி ஒன்று இருக்கிறது, குறுக்கு வழி ஒன்று இருக்கிறது. நேர் வழியில் அவர் உடல் எடை குறைத்திருந்தால் மிகவும் நல்லது. அதுவே அவர் ஒரு குறுக்கு வழியில் எடை குறைத்திருந்தால், மிகவும் தவறானது.
ஏனென்றால் இப்போது இருக்கும் அவரைப் போன்று எடை குறைக்க வேண்டும் என்றால், 2 ஆண்டுகள் ஆகும். ஆனால், இவர் குறைந்த காலத்திற்குள்ளே இப்படி மாறியிருக்கிறார். பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது.
#Atman #SilambarasanTR #VendhuThanindhathuKaadu pic.twitter.com/NoJ9VjEGKs
— Silambarasan TR (@SilambarasanTR_) August 13, 2021
ஒருவேளை அவர் இதை தொடர்ந்து பின்பற்றவில்லை என்றால், அது அப்படியே மூன்று மடங்கு எடை அதிகரிக்கும்.
எனவே அவர் தன்னுடைய வாழ்க்கை முறை, உணவு பழக்கங்களில் சரியாக இருந்தால் நல்லது, அது இல்லை என்றால் மீண்டும் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.