நல்ல பிள்ளைகளை பெற்றெடுத்ததால் நல்லாருக்கேன்! சூர்யா-கார்த்தி முன் மேடையில் அழுத நடிகர் சிவகுமார்
அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் சிவகுமார் தனது பிள்ளைகள் குறித்து பேசும்போது கண்ணீர் சிந்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
44வது ஆண்டு விருது
விழா நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விருது வழங்கும் விழாவில், அவரது தந்தை சிவக்குமார், தம்பி கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விருது வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய நடிகர் சிவகுமார், தனது வாழ்வில் சந்தித்த இன்னல்கள் குறித்தும், கடந்து வந்த பாதை குறித்தும் மனம்திறந்தார்.
மேலும் பேசிய அவர், 'நான் எந்த கெட்டப்பழக்கமும் இன்றி படிப்பு, ஓவியத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். அதன் பின்னர் சினிமாவில் நடிக்க வந்தேன். எனக்கு நல்ல பிள்ளைகள் பிறந்ததால் இந்த மேடையில் நிற்கிறேன். எல்லாருக்கும் சொல்லிக்கொள்கிறேன், உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாக நினைக்க வேண்டும் என்றால் உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்க இருக்க வேண்டும்.
அவர்களின் வெற்றி தான் உங்கள் வாழ்வின் இரண்டாம் கட்டம் நல்லாருக்கும். 50 வயதுக்கு பின் வேலை செய்ய முடியாது. கை, கால் ஓய்ந்துவிடும். அதனால் குழந்தைகளை நல்ல முறையில் வளருங்கள். அவர்களின் வெற்றியின் உங்கள் வாழ்வின் இரண்டாம் கட்ட வெற்றி. 81 வயதில் நான்கு மணிநேரம் திருக்குறள் பேசியிருக்கிறேன். அதற்கு காரணம் ஒழுக்கம் தான்' என கூறினார்.
மேடையில் அழுத நடிகர் சிவகுமார்
முன்னதாக அவர் குழந்தைப்பருவம் குறித்து பேசும்போது அழுதார். மேலும், அதிகாலையில் விழியுங்கள், நேரத்திற்கு நன்றாக சாப்பிடுங்கள், 8 மணிநேரம் உறங்குங்கள், இரவில் கண்விழிக்காதீர்கள். இதனை கடைபிடித்தால் அற்புதமாக வாழலாம் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |