தல தல தான்.. உற்சாகத்தில் துள்ளிக்குதித்த நடிகர் சூரி!
மும்பை அணிக்கான போட்டியில் தோனி பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்ததைக் கண்டு நடிகர் சூரி உற்சாகத்தில் துள்ளிக் குதித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடந்தது. சென்னை அணிக்கு வெற்றி இலக்காக 156 ஓட்டங்களை மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்தது.
CSK அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தோனி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இந்த போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த நடிகர் சூரி, கடைசி பந்தில் தோனி பவுண்டரி விளாசியத்தைக் கண்டு உற்சாகத்தில் துள்ளி குதித்தார். இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், 'தல தல தான்' என தோனியை அதில் குறிப்பிட்டுள்ளார்.
Thala thalathan #msd #MSDhoni #csk #yellove #ipl2022 #BCCI #ipl pic.twitter.com/8eST2IYdwM
— Actor Soori (@sooriofficial) April 21, 2022