ஆறு புள்ள பெத்து.. ஆறு பொறப்பு எடுத்து.. அம்மாவுக்கு நடிகர் சூரியின் வாழ்த்து!
அன்னையர் தினத்தையொட்டி நடிகர் சூரி தனது தாய்க்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பலரும் தங்களது வாழ்த்தினை தங்கள் அன்னைக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் சூரி தனது வாழ்த்தினை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஆறு புள்ள பெத்து, ஆறு பொறப்பு எடுத்து, இந்த நொடி வரைக்கும் எங்களுக்காகவே வாழும் எங்க ஆத்தா மு.சேங்கை அரசி; இன்னும் எத்தனை பொறப்பு எடுத்தாலும் உன் மக்களாவே நாங்க பொறக்கணும். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார்.
ஆறு புள்ள பெத்து ஆறு பொறப்பு எடுத்து இந்த நொடி வரைக்கும் எங்களுக்காகவே வாழும் எங்க ஆத்தா மு.சேங்கை அரசி; இன்னும் எத்தனை பொறப்பு எடுத்தாலும் உன் மக்களாவே நாங்க பொறக்கணும்.
— Actor Soori (@sooriofficial) May 8, 2022
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் #MothersDay pic.twitter.com/oVm4GA5IPk