பிரபல நகைச்சுவை நடிகர் சூரியிடம் பொலிசார் 5 மணி நேரம் துருவி துருவி விசாரணை
பிரபல நகைச்சுவை நடிகர் சூரியிடம் பொலிசார் 5 மணி நேரம் தொடர்ந்து துருவி துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.
நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர்மீது நடிகர் சூரி அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இவ்வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் நடிகர் சூரி ஏற்கெனவே ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதன் தொடர்ச்சியாக 2வது முறையாக நடிகர் சூரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜரானார். அவரிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணையில் வழக்கு தொடர்பாக கேட்கப்பட்ட 110 கேள்விகளுக்கு நடிகர் சூரி பதிலளித்துள்ளார்.
மேலும், பண மோசடி புகார் தொடர்பாக நடிகர் சூரியிடம் முழுமையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், வருவாய்த்துறை மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்துக்கு உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.