போக்ஸோ வழக்கில் நடிகர் ஸ்ரீஜித் ரவிக்கு சிறை தண்டனை
actor sreejith ravi gets 1 year jail for pocso case: போக்ஸோ வழக்கில் நடிகர் ஸ்ரீஜித் ரவிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஸ்ரீஜித் ரவிக்கு சிறை தண்டனை
50 வயதான மலையாள நடிகரான ஸ்ரீஜித் ரவி, தமிழில் கும்கி, மாத யானைக் கூட்டம், கதகளி ஆகிய படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஸ்ரீஜித் ரவி கடந்த 2022, ஜூலை 4 அன்று, அய்யந்தோல் எஸ்.என். பூங்காவிற்கு அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கு முன்னால் விளையாடிக் கொண்டிருந்த 11 மற்றும் 14 வயதுக் குழந்தைகளின் முன்னிலையில் ஆடையின்றி தோன்றியுள்ளார்.
இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீஜித் ரவியை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
விசாரணையின் போது, ஸ்ரீஜித் ரவிக்கு சில மனநலப் பிரச்சினைகள் இருப்பதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார். சிகிச்சை பலனளிக்காதபோது மட்டுமே இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
ஆனால், இந்த வாதங்களை ஏற்காத நீதிமன்றம், ஸ்ரீஜித் ரவியை குற்றவாளி என தீர்ப்பளித்தது.
POCSO சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், நடிகர் ஸ்ரீஜித் ரவிக்கு திருச்சூர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ரம்யா மேனன், ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்துள்ளார்.
முன்னதாக, ஸ்ரீஜித் ரவி 2016 ஆகஸ்ட் மாதம் பாலக்காட்டில் இதேபோன்ற ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.