அடுத்தடுத்து வெற்றிப்படத்தினை கொடுத்த சூர்யாவின் உடம்பிற்கு என்ன ஆச்சு? குழப்பத்தில் ரசிகர்கள்
நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் சூர்யா அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகின்றார்.
இந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு வெற்றிப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது.
இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் சீன் என்ற திரைப்படம் அடுத்த வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகர் சூர்யாவிற்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சீன் திரைப்படத்தில் சூர்யா
சீன் திரைப்படமானது நவம்பர் 6ம் தேதி, அதாவது நாளை வெளியாக இருப்பதையடுத்து, இப்படத்தின் ப்ரொமோஷன் விழாக்களும் நடைபெற்று வருகின்றது.
இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா நீண்ட நாட்களுக்கு பின்பு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
கொச்சியில் இப்படத்தின் ப்ரொமோஷன் விழாவலி் கலந்து கொள்ள இருந்த சூர்யாவால் கடைசி நேரத்தில் வரமுடியவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பட ப்ரொமோஷனுக்கு அதிக இடங்களுக்கு சென்று வந்ததால் நடிகர் சூர்யாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் சூர்யா தரப்பு வெளியிடும் தகவலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
