துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரசிகைக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா!
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரசிகைக்கு நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில்முன்னிணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் இணைந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரில் கலந்தது’, ‘பேரழகன்’, ‘சில்லுனு ஒரு காதல்’ உட்பட பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர்.
இத்தம்பதிகளுக்கு தியா, தேவ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2020ம் வருடம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர் என 5 தேசிய விருதுகளை நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ படம் வென்றது.
உயிரிழந்த ரசிகைக்கு அஞ்சலி செலுத்திய சூர்யா
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஆலன் மாலில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது ஐதராபாத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் சுடப்பட்டார்.
இச்சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகையாவார்.
இதை அறிந்த நடிகர் சூர்யா தனது வீட்டில், அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஐஸ்வர்யாவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும், ரசிகையின் குடும்பத்திற்கு ஆறதல் கடிதம் எழுதி அனுப்பி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
• Heartrending Words From @Suriya_Offl , Grieving The Loss Of #Aishwarya (A Passionate Fan Of #Suriya Anna, Was Shot In The Allen Mall Shooting In Texas) And Writing An Emotional Letter To The Family. pic.twitter.com/oUtbO9lwFN
— Aα∂hу?️ (@Aadhy_offl) May 19, 2023