தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்: தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சூர்யா வாழ்த்து
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக முன்னணியில் இருக்கும் சூழலில், கட்சித் தலைவர் விஜய்க்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-யின் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் 100 இடங்களைத் தாண்டி முன்னிலை வகித்து வருகிறது.

கட்சித் தலைவர் விஜய் தான் போட்டியிட்ட திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
அவருக்கு அரசியல் வட்டாரம், நடிகர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
சூர்யா வாழ்த்து
அந்த வகையில், பிரபல நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், "மக்களின் அன்பும், ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
— Suriya Sivakumar (@Suriya_offl) May 4, 2026

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |