அப்பா எங்கே என கதறிய குழந்தை.. கண்ணீருடன் ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நாமக்கல் மாவட்ட ரசிகர் மன்ற செயலாளராக இருந்த ஜெகதீசன் என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர் ஆவார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சூர்யா, நாமக்கல் மாவட்டம் மேட்டுத் தெருவில் உள்ள ஜெகதீசனின் வீட்டிற்கு சென்றார். அங்கு தனது ரசிகரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
அப்போது அப்பா எங்கே என ஜெகதீசனின் குழந்தை கதறியது சூர்யாவுக்கு சோகத்தை ஏற்படுத்தியதால் கண்ணீர்விட்டு அழுதார். அதனைத் தொடர்ந்து ஜெகதீசனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
மேலும், குழந்தைக்கான படிப்பு செலவை ஏற்பதாகவும், குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.