நடிகர் எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனை.., 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவகாரத்தில் தீர்ப்பு
சர்ச்சையாக பேசியது தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்குப்பதிவு
கடந்த 2018 -ம் ஆண்டு நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்து பகிர்ந்திருந்தார்.
இதன் பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கானது 2019 -ம் ஆண்டு MP, MLA -க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது.
1 மாதம் சிறை தண்டனை
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஜி.ஜெயவேல் இன்று தீர்ப்பளித்தார். அப்போது அவர், மிரட்டல் விடுத்தல், பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகர் நடிகர் எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
அவர் அபராத தொகையை செலுத்திய பிறகு தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாக மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்ற நீதிபதி தண்டனை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |