ஜெயலலிதா ஆவியுடன் பேசி வருகிறேன்! நடிகர் எஸ்.வி சேகர் வெளியிட்ட பகீர் தகவல்
நடிகர் எஸ்.வி சேகர் தினமும் ஜெயலலிதா ஆவியுடன் பேசி வருவதாக பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகர் மற்றும் அரசியல் பிரமுகருமான எஸ்.வி சேகர் தான் ஜெயலலிதா ஆன்மாவுடன் தொடர்பு கொண்டுபேசி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆவிகளுடன் தொடர்பு கொண்டு பேசும் முறையை தான் தெரிந்து வைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் தனது தந்தையின் ஆவிகளுடன் பேசி வருவதாகவும் அவர் பகீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எஸ்.வி சேகர் கூறியதாவது, ஜெயலலிதாவின் பாராட்டுகளைப் பெற்றவன் நான். அவர் உடன் கட்சியில் இணைந்து பணியாற்றும் போது அவரிடம் பணம் வாங்கி செலவு செய்யாத ஒரே ஆள் நான் தான். விஞ்ஞானம் முறையில் தான் எனது தந்தையுடனும், ஜெயலலிதாவுடனும் நான் பேசி வருகிறேன்.
இறந்தவர்களுடன் அதாவது ஆவிகளுடன் தொடர்பு கொண்டு பேசும் அறிவியல் அது. அதை நாம் மிக கவனமாக கையாள வேண்டும். அப்படி செய்வது ஒரு கரண்ட் உடன் இருப்பது போல.. இறந்து போனது அந்த ஆத்மாவுக்கே தெரியாது.
அந்த ஆத்துமா திரும்பவும் அந்த உடம்புக்குள் வர முயற்சி செய்யும். அதனால்தான் இறந்தவுடன் உடல்களை அடக்கம் செய்து விடுவது நல்லது. இதை சரியாக விரைந்து செய்வது இந்துக்களும் இஸ்லாமியர்களும் தான்.
இந்த இரண்டு பிரிவினரும் இறந்துவிட்டால் அதிக நேரத்திற்கு உடலை வைத்திருக்க மாட்டார்கள். ஆன்மாவுடன் பேச வேண்டும் என்று நாம் நினைத்தால் மட்டும் போதாது அவர்களும் நினைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.