51 வயதாகியும் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க இது தான் காரணம்! முதல் முறையாக உண்மையை உடைத்த தபு
பிரபல திரைப்பட நடிகையான தபு 51 வயதாகியும், தான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார்.
தமிழில் காதல் தேசம் படம் மூலம் அறிமுகமான நடிகை தபு, அதன் பின் தமிழில் இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், சினேகிதியே, டேவிட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பிசியாக இருக்கும் தபு, 51 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அது ஏன் என்பதை தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதில், எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அஜய் தேவ்கனை தெரியும். எனது சகோதரனுக்கு அவர் நெருங்கிய நண்பர். நாங்கள் மும்பை ஜுஹூ பகுதியில் வசித்தோம். அப்போது எனது ஒவ்வொரு செயலையும் அஜய் தேவ்கன் கவனித்துக்கொண்டே இருப்பார்.
நான் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வருவார். வேறு ஆண்களுடன் நான் பேசுவது அவருக்கு பிடிக்காது. யாரிடமாவது நான் பேசினால் அந்த ஆண்களுடன் சண்டை போடுவார். இதன் காரணமாகவே நான் திருமணம் செய்து கொள்ளாமல் அப்படியே இருந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.