தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் காலமானார்
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் டெலிபோன் சுப்பிரமணி சென்னையில் நேற்று காலமானார்.
நடிகர் டெலிபோன் சுப்பிரமணி உயிரிழப்பு
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் டெலிபோன் சுப்பிரமணி பிரபல காமெடி நடிகர் விவேக் உடன் நீண்ட காலமாகப் பயணித்தவர்.
67 வயதாகும் நடிகர் சுப்பிரமணி சினிமாவில் நுழைவதற்கு முன்பு தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றிதால் டெலிபோன் சுப்பிரமணி என அழைக்கப்பட்டிருக்கிறார்.
இவர் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, யுனிவர்சிட்டி, எலி போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த டெலிபோன் சுப்பிரமணி உடல்நிலை மோசமடைந்ததால் சென்னையில் நேற்று காலமானார்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள வீட்டில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் நடிகர் டெலிபோன் சுப்பிரமணி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |