நீ செத்து போய்டு என்றார்! அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு... ஆடியோ பதிவு செய்துவிட்டு தமிழ் திரைப்பட நடிகரின் மனைவி தற்கொலை
சென்னையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக தமிழ் திரைப்பட நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு குப்பை கதை திரைப்படத்தில் நடித்துள்ளவர் தங்கதுரை. இவர் மனைவி ஜெயலட்சுமி.
தங்கதுரைக்கு பல பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெயலட்சுமி, தனது கணவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், இதனால் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாகவும் கூறி தனது உறவினர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
மேலும் அந்த ஆடியோவில், இதை நான் தட்டிக்கேட்டபோது, அந்த பெண்கள் மூலம் எனக்கு பணம் கிடைக்கிறது. உன்னால் எனக்கு செலவு மட்டும் தான். எனவே நீ செத்து போய்விடு என்று அடித்து உதைத்தார். இதனால், நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெயலட்சுமி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து சென்னை விருகம்பாக்கம் பொலிசார், ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் ஜெயலட்சுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவரது உறவினர் மகேஷ் என்பவர் புகார் அளித்தார்.
இதையடுத்து ஜெயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக தங்கதுரை மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.