நடிகை த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்! பிரபல நடிகை கொடுத்த செம ஹிண்ட்: உறுதி செய்த ரசிகர்கள்
பிரபல திரைப்பட நடிகையான த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற போவதை அவருடைய நெருங்கிய தோழியும், நடிகையுமான சார்மி ஹிண்ட்டாக கொடுத்துள்ளார்.
தமிழில் கடந்த 1999-ஆம் ஆண்டு பிரசாந்த்-சிம்ரான் நடித்த ஜோடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை த்ரிஷா, அதன் பின் தன்னுடைய திறமை மூலம், தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நடிகையாக இப்போது இருக்கிறார்.
ரஜினி, அஜித், விஜய், விஜய் சேதுபதி என முன்னணி பிரபலங்கள் பலருடன் நடித்துள்ள த்ரிஷா, இப்போது பார்த்தால் கூட, முன்பு எப்படி இருந்தாரோ அப்படியே தான் இருக்கிறார்.
இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் கூட த்ரிஷாவுக்கு வயது கூடுகிறதா? இல்லை குறைகிறதா? என்று கூறியதுண்டு. தற்போது 38 வயதாகும், த்ரிஷாவின் பிறந்தநாள் கடந்த 4-ஆம் திகதி கொண்டாடப்பட்டது.
அப்போது பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அந்த வகையில் நடிகை த்ரிஷாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான சார்மியும் அவருக்கு பிறந்த நாள் தெரிவித்திருந்தார்.
தனது வாழ்த்துடன் திரிஷா பேச்சுலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார். இதனால் த்ரிஷாவுக்கு திருமணம் ஆகப் போகிறது என்பதை சார்மி மறைமுகமாக இப்படி கூறியுள்ளார்.
த்ரிஷா பிரபல தெலுங்கு நடிகரான ராணா டகுபதியை காதலித்து, அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.
அதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் வருண் சுப்பிரமணியத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று, இறுதியில் பல காரணங்களால் அந்த திருமணமும் நின்று போனது குறிப்பிடத்தக்கது.