84 பேர் பலி..போர்க்கால அடிப்படையில் கேரளாவுக்கு நிவாரண நடவடிக்கை வேண்டும் - த.வெ.க தலைவர் விஜய்
கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட செய்தி அறிந்து வருத்தப்படுவதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவிற்கு தற்போது வரை 84 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வரும் நிலையில், நிலச்சரிவு சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட தலைவர்கள் பலரும் தங்கள் வருத்தத்தையும், நிவாரணம் குறித்தும் பதிவிட்டனர்.
இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கேரளாவுக்கு நிவாரண நடவடிக்கை எடுக்கக்கோரி பதிவிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ''கேரளாவின் வயநாட்டில் துயரமான நிலச்சரிவு செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் துயரத்திற்கு ஆளான குடும்பத்தினருடன் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
Deeply saddened on hearing the tragic news of landslide #Wayanad, #Kerala.
— TVK Vijay (@tvkvijayhq) July 30, 2024
My thoughts and prayers are with the bereaved families.
Request the Government authorities that the necessary rescue and relief measures be provided to the affected on a war-footing.