உடல் முழுவதும் காயம்! பிரபல தமிழ் திரைப்பட வில்லன் நடிகரின் மருமகள் தூக்கிட்டு தற்கொலை... மகனான இளம்நடிகர் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு
பிரபல நடிகர் உன்னி தேவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் சூரியன், செங்கோட்டை, குஷி, ரெட், தெனாவட்டு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளவர் ராஜன் பி தேவ்.
இவர் மலையாளத்திலும் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மகன் உன்னி தேவும் பிரபல நடிகராக உள்ளார்.
இவருக்கும் பிரியங்கா (26) என்ற பெண்ணுக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்தனர்.
சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. மனைவியை உன்னிதேவ் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து உன்னி தேவ் மீது பிரியங்கா பொலிஸில் புகார் அளித்தார். மனுவில் கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் புகார் அளித்த மறுநாளே பிரியங்கா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
பிரியங்கா உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் அவர்கள் கூறுகையில், பிரியங்கா உடல் முழுவதும் காயம் உள்ளது. உன்னிதேவ் அடித்து துன்புறுத்தியதால்தான் இறந்துள்ளார். பிரியங்காவின் நகைகளை உன்னி தேவ் விற்று செலவு செய்துள்ளர் என கூறியுள்ளனர்.
இதோடு உன்னி தன்னை அடித்து கொடுமைப்படுத்தும் வீடியோவையும் பிரியங்கா பதிவு செய்திருந்த நிலையில் அது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.