நடிகர் வடிவேலு உடல் நிலை எப்படி உள்ளது? சற்று முன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை சற்று முன்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு, தன்னுடைய புதிய படமான நாய்சேகர் படத்திற்காக, இயக்குனர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோருடன் லண்டனுக்கு இந்த மாத துவக்கத்தில் சென்றிருந்தார்.
அங்கு 10 நாட்கள் தங்கிய பின்பு, தமிழகம் திரும்பிய அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, ஒமைக்ரான தொற்றுக் கூடிய அறிகுறிகள் இருப்பதாக கூறி, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சற்று முன் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடிவேலுவின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவர் விரைவில் டிஸ்ஜார்ஜ் செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.