உங்களை கையெடுத்து கும்புடுறேன், கட்டாயப்படுத்தாதீங்க.., மொழி விவகாரம் குறித்து நடிகர் வடிவேலு பேச்சு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட விழாவில் நடிகர் வடிவேலு மொழி விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
வடிவேலு பேசியது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 'மக்கள் முதல்வரின் மனிதநேய விழா' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நடிகைகள், நடிகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு பேசுகையில், "தமிழ் மொழிக்கு பிரச்சனை வந்துள்ளது. அது உங்களுக்கு தெரியும். காக்கா, கிளி, மாடு, நாய் எல்லாம் அதனுடைய தாய்மொழியில் தான் பேசுகிறது.
மாட்டை நாய் மாதிரி கத்த சொன்னால் முடியுமா? யார் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும், ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தாதீங்க. உங்களை கையெடுத்து கும்புடுறேன்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கலாச்சாரம், மொழி இருக்கிறது. அது தான் அந்த மாநிலத்தின் அடையாளம். அதேபோல, தமிழ்நாட்டிற்கு தமிழ்மொழி தான்.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு உருவான தமிழ் மொழிக்கு எவ்வளவு வலிமை இருக்கும். இந்த மொழி தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையில் நிற்கிறது.
என்ன நடந்தாலும் சரி மொழிக்காக உயிரையே கொடுப்பேன் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். இந்த வாரத்தை நெகிழ வைத்துள்ளது. நான் அரசியல் பேசவில்லை என்னுடைய மொழியை பற்றி தான் பேசுகிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |