என் தாய் இறப்பிற்கு காரணம்! யாருக்கும் தொல்லை கொடுக்கல... நடிகர் வடிவேலு சோகமாக பேசிய வீடியோ
தாயாரின் இறப்பிற்கான காரணத்தை நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ளார்.
வடிவேலு தாயார் மரணம்
தமிழ் திரையுலகின் நகைச்சுவை ஜாம்பவானாக திகழ்பவர் நடிகர் வடிவேலு. அவரின் தாயாரான சரோஜினி (87) இன்று மதுரையில் காலமானார். சரோஜினி மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தாயார் மரணம் தொடர்பாக நடிகர் வடிவேலு வெளியிட்ட வீடியோவில், உடல்நிலை சரியில்லாமல் அம்மா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
தனது தாயார் மறைவு குறித்து நடிகர் வடிவேலுவின் வீடியோ பதிவு pic.twitter.com/7Yl8ocbqwF
— DON Updates (@DonUpdates_in) January 19, 2023
யாரையும் தொந்தரவு செய்யவில்லை
பின்னர் வீடு திரும்பி எங்களுடன் இருந்த போது திடீரென நுரையீரலில் சளி அதிகமானதால் நாடித்துடிப்பு குறைந்துவிட்டது. பொங்கலுக்காக தான் இங்கு ஊருக்கு வந்தேன். பொங்கல் முடியும் வரை யாரையும் அவர் தொந்தரவு செய்யவில்லை.
மாடெல்லாம் புடிச்சுட்டு வாங்க அதுக்கப்புறம் தான் போவேன் என்று வாங்க எல்லாம் பண்டிகையையும் முடித்துவிட்டு யாருக்கும் தொல்லை கொடுக்காமல் அந்த அம்மா சென்று விட்டார் என கூறியுள்ளார்.