நான் இப்போ நல்லா இருக்க காரணமே விவேக் தான்! கண்ணீர் விட்டு அழுத நடிகர் வையாபுரி
நடிகர் விவேக் மறைவால், வையாபுரி மிகவும் வேதனையுடன் கண்கலங்கிய நிலையில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இன்று அதிகாலை 4.35 மணிக்கு நகைச்சுவை நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு குறித்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மற்றொரு காமெடி நடிகரான வையாபுரி மிகுந்த வேதனையுடன் சில தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
விவேக்கின் மறைவு திரையுலகிற்கு மட்டுமின்றி, உலகமே எதிர்பார்க்காத ஒரு இழப்பு. யாராவது ஒருவருக்கு உடம்பு சரியில்ல, படுத்திருந்தாங்க இல்ல இந்த வியாதி அந்த வியாதினு சொல்லியிருந்தா பரவாயில்லை.
ஆரோக்கியமா ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி நெஞ்சுவலி வருவதற்கு முதல் நாள் கொரோனா தடுப்பூசி ஊசி போடப்போகும் போதுகூட அவ்வளவு நீட்டா ஜெர்கின் எல்லாம் போட்டுக்கொண்டு வந்தார்.
ஆனால், இன்று உயிரிழந்துவிட்டார் எனச் சொன்னால் யாராலும் நம்பமுடியவில்லை. நான் முதன்முதலாக சினிமாவில் நடித்தேன் என்றால் அது விவேக் சார் உடன் தான்.
முதன் முதலில் தூர்தர்ஷனில் இளையராகம் படம் மூலம் அவருடன் இணைந்து நடித்தேன். அதே போல் பத்திரிகையில் முதன்முதலாக வையாபுரி என பேர் வந்தது.
விவேக் -வையாபுரி காம்பினேஷன் நன்றாக இருக்கிறது என்று பெயர் வந்ததற்கும் அவர் தான் காரணம். முதன்முதலாக நான் வெளிநாடு சென்றதும் அவரால்தான்.
இன்றைக்கு நான் நல்லா இருக்கக் காரணமும் விவேக் சார் தான். உண்மையிலேயே இந்த நாள் என் வாழ்க்கையிலேயே மறக்கமுடியாத, ஜீரணிக்க முடியாத நாள். எப்படி சொல்வதென்றே தெரியவில்லை என கண்கலங்கினார்.