600 சவரன் நகை, ரூ.8 லட்ச புடவை; தமிழகத்தையே அதிர வைத்த வேல ராமமூர்த்தியின் பேத்தி திருமணம்!
எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தியின் பேத்தி வைஷ்ணவி மற்றும் தொழிலதிபர் ஆர் எஸ் முருகனின் மகன் விஜய் ராகுலின் திருமணம் தான் தற்போது இணையத்தில் அனைவரது பேச்சுப் பொருளாகவும் மாறியிருக்கிறது.
தமிழகத்தையே அதிர வைத்த தங்க திருமணம்
இந்தியாவிலும் சரி பல நாடுகளிலும் சரி திருமணம் என்பது பலராலும் பிரமாண்டமாக நடைபெறும் ஒரு விழாவாகும்.
அரண்மனைகள் முதல் ஆடம்பரமான விருந்துகள் வரை செழுமை நிறைந்த திருவிழா போன்று பல திருமணங்கள் நடைபெற்று வருகிறது.
பணக்காரரான அம்பானி மகன் திருமணம் நிச்சயதார்த்தம், ப்ரீ வெட்டிங், கல்யாணம், ரிசப்ஷன் என ஓராண்டுக்கும் மேலாக நடந்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.
அந்தவகையில் தற்போது தமிழகத்தையே அதிர வைத்த பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தியின் பேத்தி திருமணம் நடந்து முடிந்துள்ளது.
குறித்த திருமணமானது திருநெல்வேலியை அலறவிட்டுள்ளது எனலாம். தங்கத்தில் மாலை, பல லட்சத்தில் புடவை என பல கோடி செலவழித்து இந்த திருமணத்தை நடந்தி முடித்துள்ளனர்.
600 சவரன் நகை முதல் ரூ.8 லட்சத்திற்கு புடவை வரை...
பல்லாக்கில் பெண் அழைப்பு மற்றும் மாப்பிள்ளை அழைப்பில் தொடங்கி, மருமகளுக்கு தங்க ஜரியில் நெய்யப்பட்ட ரூ.8 லட்ச ரூபாயில் புடவை, மூன்று லட்சம் ரூபாயில் ஜாக்கெட், தலையில் வைத்த பூ கூட தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்கும் தங்கத்தால் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது.
இதைப்பார்த்த பலர் அம்பானி வீட்டுக்கு கல்யாணத்தில் கூட தங்கத்தால் மாலை அணியவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் குறித்த திருமணத்தில் 25-ஆயிரம் பேர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
திருமண வரவேற்பு, பூவால் அலங்கரிக்கப்பட்ட மண மேடை, பல்லாக்கு ஊர்வலம், செண்டை மேளம், மணமக்களை வரவேற்க யானை என பிரம்மாண்டத்தின் உச்சமாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
மேலும் பல்வேறு கிராமிய நடனங்கள், திரைப்பட பின்னணி பாடகர்கள் எஸ் பி சரண், சைந்தவி, சூப்பர் சிங்கர் பாடகர்கள் உள்ளிட்ட பலர் இனிமையான பாடல்களை பாடியுள்ளனர்.
இந்த திருமணத்தில், அரசியல்வாதிகள், நடிகர் சூரி, எதிர்நீச்சல் பட இயக்குனர் திருச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |