நான் உயிரோடு இருக்கிறேன்! அந்த சாபத்தால் இப்படி ஆகிவிட்டதோ... பிரபல தமிழ் நடிகர் உருக்கம்
நான் உயிருடன் தான் இருக்கிறேன் என நடிகர் வேணு அரவிந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ் ரசிகர்களிடையே பிரபலம்
அலைகள், வாணி ராணி, அரசி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் வேணு அரவிந்த். இவர் என்னவளே, இனியவளே, நரசிம்மா, வல்லவன் போன்ற பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
அவருடைய தலையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்தாகவும் பிறகு அவர் கோமா நிலைக்குச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இத்தகவலை சக நடிகர்கள் மறுத்து சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டார்கள்.
இது தொடர்பாக மெளனம் கலைத்துள்ள வேணு அரவிந்த், கடந்தவை, கடந்தவை ஆகவே இருக்கட்டும் நான் இப்போது உயிரோடு இருக்கிறேன். இனிமேல் என்ன நடக்கிற போகிறது என்பதை மட்டும் பார்க்கலாம்.
பலமுறை நொந்து கொண்டேன்
நான் வில்லனாக நடித்து பலரின் வாயில் விழுந்த பாவம் தான் எனக்கு இதெல்லாம் நடந்திருக்கிறது என்று கூட தோன்றுகிறது. நான் சீரியலில் வில்லனாக நடிக்கும் போது பலர் வெளியே போகும்போது என்னை முகத்துக்கு நேராகவே திட்டி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் அது என்னுடைய நடிப்பிற்கு கிடைத்த வெகுமதி என்று நினைத்திருந்தேன்.
ஆனால் பலர் எனக்கு விட்ட சாபத்தால் தான் எனக்கு இப்படி ஆகிவிட்டதோ என்று கூட பலமுறை நான் நொந்து இருக்கிறேன் ஒருநாள் காரில் உட்கார்ந்திருந்தபோது ஒரு பெண்மணி என்னைத் திட்டிவிட்டு மண்ணைத் தூக்கி காரில் வீசினார்.
இந்தச் சாபம் எல்லாம் என்னைப் பாதிக்குமோ என நான் எண்ணுவேன் என கூறியுள்ளார்.