ஆடை இல்லாமல் 14 நாட்கள் இமயமலையில் நின்ற அஞ்சான் பட நடிகர் : அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்
நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் தோழனாக நடித்திருந்த வித்யுத் ஜமால் ஆடை இல்லாமல் இமயமலையில் 14 நாட்களை கழித்துள்ளதாக புகைப்படங்கள் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
ஆடை இல்லாமல் 14 நாட்கள் இமயமலையில்
தளபதி விஜய் மற்றும் சூர்யா என பல பிரபலமான நடிகர்களுடன் நடித்த பெருமையை பெற்ற பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமால் இமய மலையில் துறவியை போல ஆடை இல்லாமல் இருந்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
43 வயதாகும் இவர் ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் இப்படி இயற்கையோடு ஒட்டி வாழ்வதை வழக்கமாக வைத்துக்கொள்வதில் ஆசையாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இமய மலையின் காடுகளில் அடுப்பை பற்ற வைத்து சமைக்கும் புகைப்படங்களையும், நதியில் இறங்கி குளிக்கும் புகைப்படங்களையும் வித்யுத் ஜமால் தனது சமூக ஊடங்களில் பதிவேற்றியுள்ளார்.
மேலும் இவர் சமீபத்தில் நடித்து வந்த, க்ராக் திரைப்படம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |