ரூ.2.50 கோடி.., புதிய சொகுசு காரை வாங்கிய நடிகர் விஜய்: வெளியான வீடியோ
நடிகர் விஜய் ரூ. 2.50 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் இளைய தளபதி விஜய்.
இன்னும் ஒரேயொரு படத்தில் நடித்துவிட்டு அரசியலுக்குள் விஜய் முழுமையாக நுழையப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இதனால் தி கோட் மற்றும் அதற்கு அடுத்த படம் மிகப்பெரும் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்களின் மீது ஆர்வம் கொண்ட விஜய்யிடம் மினிகூப்பர், இனோவா, பிஎம்டபிள்யூ என பல கார்கள் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தது.
Thalapathy vijay’s new Luxus LM ??
— Janhvi kapoor(Parody) (@JanhviKapoor33) August 13, 2024
Good Afternoon X fam ! pic.twitter.com/dQRiikO7Tn
இந்நிலையில் ரூ. 2.50 கோடி மதிப்புள்ள Lexus LM என்ற புதிய சொகுசு காரை விஜய் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யுடைய வீட்டிலிருந்து இந்த லெக்சஸ் கார் வெளியே செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |