'அபராதம் கட்ட விருப்பம் இல்லை' முடிவுக்கு வந்த விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் வழக்கு!

Vijay Rolls Royce Ghost Actor Vijay Case Vijay Tax Case Vijay Rolls Royce Tax Case
By Ragavan Jul 28, 2021 01:49 PM GMT
Report

ரூ. 1 லட்சம் அபராதத்தை நிவாரண நிதியாகத் தர விருப்பமில்லை என உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தத் தடை கோரிய பிரதான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 2012-ம் ஆண்டு நடிகா் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தாா். இந்த காரை தென் சென்னை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தாா்.

காருக்கான நுழைவு வரியை செலுத்த உத்தரவிடப்பட்டது. இந்த நுழைவு வரி அதிகமாக உள்ளதால், வரியை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2012-ல் விஜய் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், நுழைவு வரித் தொகையில் 20 சதவீதத்தை செலுத்திவிட்டு காரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்து, நடிகா் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் (வழக்குச் செலவு) விதித்து உத்தரவிட்டாா்.

இந்த தீா்ப்பை எதிா்த்து விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுதாரா் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட கண்டனக் கருத்துகள் அடங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா்.

நுழைவு வரியைச் செலுத்த நடிகா் விஜய் தயாராக இருப்பதாகக் கூறுவதால், இந்த தீா்ப்பு நகல் கிடைத்த ஒரு வாரத்துக்குள் நுழைவு வரி தொகை குறித்த தகவலை வணிக வரித்துறை அதிகாரிகள் நடிகா் விஜய்க்கு கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே 20 சதவீத வரி செலுத்திவிட்டதால், எஞ்சிய 80 சதவீத நுழைவு வரித் தொகையை அதிகாரிகளிடம் இருந்து கடிதம் கிடைத்த ஒரு வாரத்துக்குள் நடிகா் விஜய் செலுத்த வேண்டும் என தெரிவித்து விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

இந்நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கில் அபராதம் செலுத்துவது பற்றி அறிக்கை தாக்கல் செய்வதற்காகப் பிரதான வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட கண்டனக் கருத்துகள் அடங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு மேல்முறையீட்டு வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது குறித்து தெரிவித்தார்.

அபராதத் தொகையான ரூ. 1 லட்சத்தை கரோனா நிவாரண நிதியாக செலுத்தாதது ஏன் என்கிற கேள்வி விஜய் தரப்பிடம் எழுப்பப்பட்டது. கடந்த ஆண்டு ஏற்கெனவே கரோனா நிவாரண நிதியாக அரசுக்கு ரூ. 25 லட்சம் தந்துள்ளேன். அபராதமாக விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் தொகையை கரோனா நிவாரண நிதியாகச் செலுத்த விருப்பம் இல்லை என்று விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த காருக்கு நுழைவு வரி செலுத்த தடை கோரிய பிரதான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US