பிக்பாஸில் கோடிகளில் சம்பளம் வாங்கும் விஜய்சேதுபதி.., அவரின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி.
சிறிய சிறிய கதாபத்திரத்தில் நடித்த இவருக்கு சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர வேடங்களையும் ஏற்று நடித்த விஜய் சேதுபதிக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்தன.
இப்படி பான் இந்தியா அளவில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளாராக களமிறங்கினார்.
கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியின் 7 சீசன்களை தொகுத்து வழங்கிய நிலையில், 8வது சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக அவதரித்தார்.
சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கே விஜய் சேதுபதிக்கு வெறும் ரூ.30 கோடி தான் சம்பளமாக வழங்கப்படுகின்றது.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் விஜய் சேதுபதிக்கு ரூ.60 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி 14 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது வரை அவர் 50 படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் சேதுபதிக்கு ரூ.140 கோடி சொத்து உள்ளது.
இவருக்கு சென்னையில் சொந்தமாக ரூ.50 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா உள்ளது. சம்பாதிக்கும் பணத்தை பெரும்பாலும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறாராம் விஜய் சேதுபதி.
சென்னையில் கீழ்பாக்கம், என்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இவருக்கு சொந்தமாக 100 ஏக்கருக்கு மேல் இடங்கள் உள்ளதாம்.
அதேபோல் விஜய் சேதுபதியிடம் Mini Cooper, BMW 7 Series, Innova, Benz போன்ற சொகுசு கார்களும் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |