496/500 மார்க் வாங்கினேன்... ஆனா எனக்கு விஜய் சார் விருது கிடைக்கல- மாணவி வேதனை
பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வில் 496/500 மார்க் வாங்கினேன். ஆனா, எனக்கு விஜய் சார் விருது கிடைக்கவில்லை என்று மாணவி ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு விருது அளித்த விஜய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய், ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தொகுதி வாரியாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது.
@PeaceBrwVJ
இதனையடுத்து, கடந்த 17ம் தேதி சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். தமிழகத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு மேடையில் நடிகர் விஜய் பரிசுத்தொகை அளித்தார்.
வேதனை தெரிவித்த மாணவி
இந்நிலையில், பத்தாம் வகுப்பில் 496/500 மார்க் வாங்கி தமிழ்நாட்டில் 2-ம் இடம் பிடித்தும், நடிகர் விஜய் விருது எனக்கு கிடைக்கவில்லை என்று வேதாரண்யத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், என் பெயர் லட்சுதா, நான் வேதாரண்யத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன்.
நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 2ம் இடமும், நாகை மாவட்டத்தில் முதல் இடமும், வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் முதல் இடமும் பெற்றேன். என்னை மாவட்ட ஆட்சியர் அலவலர் அழைத்து பாராட்டினார்.
மற்ற அரசியல் தலைவர்கள் என் வீட்டிற்கு வந்து என்னை பாராட்டினார்கள். தளபதி விஜய் என்னை அழைத்து பாராட்டுவாங்க என்று நினைத்தேன். ஆனால், என்னை அழைக்கவே இல்லை. இது எனக்கும் என் கிராமத்தில் உள்ளவர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |