மீண்டும் தீவிர சிகிச்சையில் நடிகர் விஜயகாந்த்: வெளிவந்த தகவல்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜயகாந்த் உடல்நலக்குறைவு
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் கடந்த 18 -ம் திகதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்று குறிப்பிட்டிருந்தது.
இதனையடுத்து, சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் விஜயகாந்த் குறித்து வெளிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பிரேமலதா வெளியிட்டிருந்தார்.
தீவிர சிகிச்சை?
இதனைத்தொடர்ந்து, விஜயகாந்த் குறித்து தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என்றும், அவர் இரண்டு, மூன்று நாள்களில் வீடு திரும்புவார் என்றும்அவரது மனைவி பிரேமலதா கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நுரையீரல் துறை நிபுணர்கள் அவரை கண்காணித்து வருவதாகவும், ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |