விஜயகாந்தின் உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றமில்லை: கண்ணீரில் தொண்டர்கள்
நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான தகவல் தொண்டர்களை சோகத்தில் தள்ளியது.
விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த நவ18-ம் திகதி இரவு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ராகுல் காந்தி, பார்த்திபன் என அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் தெரிவித்து வருகின்றனர்.
சோகத்தில் தொண்டர்கள்
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான மருத்துவமனை அறிக்கையில் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்ற செய்தி தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, அவரது மனைவி பிரேமலதா, ''கேப்டன் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்'' என வீடியோ வெளியிட்டது தொண்டர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆறுதலாக அமைந்தது.
தற்போது, விஜயகாந்திற்கு கொடுத்து வரும் சிகிச்சையால் அவரது உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றமும் ஏற்படவில்லை என வெளியாகியுள்ள தகவல் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |