ராஷ்மிகா உடன் நிச்சயதார்த்தம்.., உண்மையை கூறிய விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா இருவருக்கும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் என்ற செய்தி வலம் வந்தது. இதற்கு முதன்முறையாக விஜய் தேவரகொண்டா பதிலளித்துள்ளார்.
தீயாய் பரவிய தகவல்
டோலிவுட்டில் முன்னணி நடிகராக விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவும் உள்ளனர்.இவர்கள் இருவரும் இனைந்து நடித்த படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக இருந்திருக்கிறது.
அத்துடன் இந்த ஜோடி பற்றி காதல் கிசுகிசுவும் சேர்ந்து கொண்டது. இருவரும் ஒரே மாதிரியான உடைகளை பொது வெளியில் அணிவது, ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்பது போன்ற புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகுவது உண்டு.
அதேபோல, போன வருட தீபாவளியை இருவரது குடும்பமும் ஒன்றாகக் கொண்டாடியது எனவும் தகவல் பரவியது.
இந்நிலையில், ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா ஜோடி வருகிற பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருக்கிறது என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
விஜய் தேவரகொண்டா பதில்
இதுகுறித்து, முதல்முறையாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார்.
அதில், ''வருகிற பிப்ரவரி மாதத்தில் நான் யாருடனும் திருமணமோ அல்லது நிச்சயதார்த்தமோ செய்ய போவதில்லை. நான் 2 வருடங்களுக்கு ஒரு முறை திருமணம் செய்துகொள்கிறேன் என ஊடகங்கள் நினைக்கின்றன. இது போன்ற வதந்திகள் மூலம் என்ன திருமணம் செய்யும்படி வற்புறுத்துகின்றன'' என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் ராஷ்மிகாவுடன் தனது நிச்சயதார்த்த வதந்திக்கு விஜய் தேவரகொண்டா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |