6.5 லட்சம் லஞ்சம் கொடுத்து படத்தை வெளியிட்டேன்! பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு
நடிகர் விஷால் தனது மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட 6.5 லட்சமாக பெறப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டினை கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் 'மார்க் ஆண்டனி' படத்தின் இந்தி பாதிப்பினை வெளியிட, சென்சார் போர்டு மற்றும் திரையிடல் என 6.5 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்ததாக நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவரது பதிவில்,
'வெள்ளித்திரையில் ஊழல் காட்டப்படுவது நல்லதுதான். ஆனால் நிஜ வாழ்க்கையில் இல்லை. சீரணிக்க முடியாது. குறிப்பாக அரசு அலுவலகங்களில். அதுவும் CBFC மும்பை அலுவலகத்தில் இன்னும் மோசமாக நடக்கிறது. எனது மார்க் ஆண்டனியின் இந்தி பதிப்பிற்கு 6.5 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது.
இரண்டு பரிவர்த்தனைகள். திரையிடலுக்கு 3 லட்சம் மற்றும் சான்றிதழுக்கு 3.5 லட்சம். எனது கேரியரில் இந்த நிலையை சந்தித்ததில்லை. இன்று திரைப்படம் வெளியானதில் இருந்து சம்பந்தப்பட்ட தரகர் மேனகாவுக்கு பணம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.
இதை மகாராஷ்டிராவின் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் எனது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இதை செய்வது எனக்காக அல்ல, எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. நடக்கவில்லை. நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போனதா??? வழி இல்லை. அனைவரும் கேட்கும் வகையிலான ஆதாரம் உள்ளது. எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன்' என கூறியுள்ளார்.
#Corruption being shown on silver screen is fine. But not in real life. Cant digest. Especially in govt offices. And even worse happening in #CBFC Mumbai office. Had to pay 6.5 lacs for my film #MarkAntonyHindi version. 2 transactions. 3 Lakhs for screening and 3.5 Lakhs for… pic.twitter.com/3pc2RzKF6l
— Vishal (@VishalKOfficial) September 28, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |