எங்கு பார்த்தாலும் தண்ணீர், இதை கேவலமாக பார்க்கிறேன்: நடிகர் விஷால் ஆவேசம்
என் அப்பா, அம்மா எல்லாரும் அச்சத்தில் உள்ளனர், எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி இருப்பது கேவலமான விஷயமாக பார்க்கிறேன் என நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் கேள்வி
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் சென்னை வெள்ளம் தொடர்பாக x தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள நடிகர் விஷால், புயல் என்றால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும், பின்னர் தண்ணீர் தேங்கி வீட்டிற்குள் நுழைந்து விடும் தண்ணீர் புகுந்து விடும் இதுதான் வழக்கம்.
அப்படி தான் தற்போது அண்ணா நகரில் உள்ள என்னுடைய வீட்டில் தண்ணீர் புகுந்துவிட்டது, அண்ணா நகரிலேயே இந்த நிலைமை என்றால் மற்ற இடங்களை யோசித்து பாருங்கள்.
Dear Ms Priya Rajan (Mayor of Chennai) and to one & all other officers of Greater Chennai Corporation including the Commissioner. Hope you all are safe & sound with your families & water especially drainage water not entering your houses & most importantly hope you have… pic.twitter.com/pqkiaAo6va
— Vishal (@VishalKOfficial) December 4, 2023
2015ம் ஆண்டு இத்தகைய நிலைமை ஏற்படும் போது அனைவரும் சாலையில் இறங்கி சேவை செய்தோம், ஆனால் 8 வருடம் கழித்தும் அதைவிட மோசமான நிலை என்றால் கேள்வி குறியாக உள்ளது.
என்னுடைய அப்பா, அம்மா எல்லோரும் அச்சத்தில் உள்ளனர். மழைநீர் சேமிப்பு மற்றும் வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சி திட்டம் என்ன ஆனது? என தெரியவில்லை. இதனை நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்,
மேலும் சென்னை தொகுதி எம்.எல்.ஏ அனைவரும் வெளியே வந்து உதவினால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும் என நடிகர் விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |