தவறாக நடந்துகொள்ள முயற்சித்தால் செருப்பால அடிக்கணும்! நடிகர் விஷால் ஆவேசம்
கேரள திரையுலகை அதிர வைத்துள்ள பாலியல் அத்துமீறல்கள் குறித்து நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹேமா கமிஷன் அறிக்கை
மலையாள திரையுலகில் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில் நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஷால் கருத்து
இந்நிலையில் தமிழ்ப்பட நடிகர் விஷால் இதுதொடர்பில் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
"ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட உலகிலும் ஒரு குழு விரைவில் அமைக்கப்படும். எவனாவது தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தால், முதலில் அந்த பெண்ணுக்கு தைரியம் வேண்டும். அந்தப் பெண்மணி அவனை செருப்பால அடிக்கணும். ஒரு குழு அமைக்க நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. யாராக இருந்தாலும் பெண்களை இதுபோன்று பயன்படுத்த நினைப்பவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும்" என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |