உதயநிதி அமைச்சரானது வாரிசு அரசியலா? நடிகர் விஷால் சொன்ன கருத்து
உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ளது பற்றி நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.
அமைச்சரான உதயநிதி
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுகவில் வாரிசு அரசியல் தொடருவதை உதயநிதி அமைச்சரானது மூலம் மீண்டும் நிரூபணமானது என எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன.
விஷால் கருத்து
இது தொடர்பில் தமிழ் திரையுலகில் இருந்து முதல் குரலாக நடிகர் விஷாலின் குரல் ஒலித்துள்ளது. அவர் கூறுகையில், என்னுடைய நண்பன் உதயநிதி அமைச்சர் பதிவியேற்றதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.
வாரிசு அரசியல் என்பது மேலோட்டமாக பார்ப்பது. அவருக்கு கொடுக்கக்கூடிய பதவியை தகுதியாக பார்க்கிறாரா என்பதை கருதியே முதல்வர் மு.க ஸ்டாலின் அமைச்சர் பதவியை கொடுத்துள்ளார்.