நடிகர் விவேக் மரணம் முக்கிய உதாரணம்! தடுப்பூசி விஷயத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு
நடிகர் விவேக் தடுப்பூசி போட்ட பின் உயிரிழந்த நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தடுப்பூசி போடும் முன்பாக அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரபல திரைப்பட நடிகரான கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் திகதி திடீர் மாரடைப்பு காரண்மாக உயிரிழந்தார். அவர் உயிரிழப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் தான், அவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு, மக்களுக்கிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.
ஆனால், மறுநாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின், ஏப்ரல் 17-ஆம் திகதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது தொடர்பாக, விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் இறந்தார்.
அவருக்கு முன்னதாக முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்படாததும் அதற்கு முக்கிய காரணமாகும். இது தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பாக, அனைவருக்கும் உரிய மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும்.
அப்போது தான், எதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது தெளிவாக தெரிய வரும். இதற்கு நடிகர் விவேக் மரணம் ஒரு முக்கிய உதாரணமாக உள்ளது.
மனுதாரரின் இந்த கோரிக்கை குறித்து 8 வாரத்துக்குள் ஒன்றிய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என உத்தரவிட்ட ஆணையம், வழக்கை முடித்து வைத்தது.