வீட்டில் பேசிகொண்டிருந்த போதே சரிந்து விழுந்த நடிகர் விவேக்! பதறிய குடும்பம்... அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்ன?
மாரடைப்பால் அவதிப்பட்ட நடிகர் விவேக்கிற்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், காலையில் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது திடிரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார்.
இதையடுத்து குடும்பத்தார் பதறியுள்ளனர், பின்னர் சென்னையில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கூறியுள்ளார்.
விவேக் சுயநினைவோடு உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விவேக்கிற்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய எக்மோ சிகிச்சையும் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விரைவில் நலம்பெற ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் விருப்பம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.