விவேக் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு! தமிழக அரசு அறிவிப்பு
மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலமானார்.
விவேக்கிற்கு அரசு மரியாதை வழங்க தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்டது தமிழக அரசு. ஏனெனில் சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டது.
இதையடுத்து விவேக் உடலுக்கு காவல் துறை மரியாதை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, இந்த உத்தரவு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
விவேக்கின் சமூக சேவையை போற்றும் வகையில் காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது.