தங்க செருப்பு முதல் வைர புடவை வரை.., நடிகை வரலக்ஷ்மிக்கு கணவர் கொடுத்த திருமண பரிசு
பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும், பிரபல நடிகையுமான வரலக்ஷ்மி தனது காதலர் நிக்கோலை கரம்பிடித்தார்.
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோல், நடிகை வரலக்ஷ்மி இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என சினிமா நட்சத்திரங்கங்கள் பலரும் வரலக்ஷ்மியின் சங்கீத் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் முதலமைச்சர் முதல் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வரலக்ஷ்மி மற்றும் நிக்கோல் இருவரின் திருமண வரவேற்பு மற்றும் மெகந்தி, சங்கீத் நிகழ்ச்சியின் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இவர்கள் இருவருக்கும் ஜூன் 3 ஆம் திகதி தாய்லாந்தில் திருமணம் முடிந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது மனைவி வரலக்ஷ்மிக்கு கணவர் நிக்கோல் ரூ. 200 கோடிக்கு சொத்து வாங்கி வைத்துள்ளாராம்.
வைரக்கல் பதிக்கப்பட்ட புடவை, தங்க செருப்பு, வைரம் மற்றும் தங்க நகைகள் என பரிசை வழங்கியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |