பெண் குழந்தையை தத்தெடுத்த கமல் பட நடிகை! வெளியிட்ட உருக்கமான பதிவு
பிரபல தமிழ் நடிகையான அபிராமி தான் தத்தெடுத்த குழந்தையோடு, அன்னையர் தினத்தை கொண்டாடுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல தமிழ் நடிகை அபிராமி
தமிழ் சினிமாவில் நடித்த பிரபல நடிகையான அபிராமி, கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.
மலையாள இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணனின் கதபுருசன் படத்தில் நடிக்க துவங்கிய அபிராமி, பின்னர் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கும் பணியை செய்து வந்தார்.
@IMDB
இவர் தமிழில் வானவில் படத்தில் நடித்து மிக பிரபலமானார். மேலும் கமலஹாசன் இயக்கிய விருமாண்டி படத்தில் அபிராமி நடித்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல நடிகை என பெயர் வாங்கி கொடுத்தது.
தத்தெடுத்த குழந்தை
இந்நிலையில் அபிராமிக்கும், ராகுல் பாவாணன் என்பவருக்கு கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. இத்தம்பதியினர் திருமணம் செய்ததிலிருந்து இருவருக்கும் குழந்தை இல்லை.
இதனால் கடந்த ஆண்டு அபிராமி(abhirami) ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அன்னையர் தினமான நேற்று தனது கணவர் மற்றும் குழந்தையோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் ’நானும், கணவரும் கடந்த ஆண்டு தத்தெடுத்து வளர்த்து வரும் கல்கி என்ற எங்கள் மகளுக்கு பெற்றோர்கள் ஆகிவிட்டோம், அன்னையர் தினத்தில் நான் தாயாக உணர்கிறேன்’ என பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் திரை பிரபலங்கள் மட்டும் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.