என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகோங்க! அவனை விட்றுங்க.. கொல்ல துடிக்குறாங்க.. பிரபல தமிழ்ப்பட நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

actress chennai complaint tamilactress adira pandiyalakshmi
By Raju Jun 17, 2021 02:35 AM GMT
Report

திமுக இளைஞரணியினர் தன்னையும் தனது மகனையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதாக புகார் அளித்துள்ள நடிகை ஆதிரா பாண்டிலட்சுமி அதிர்ச்சி வீடியோவையும் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் மருது, ஒரு குப்பை கதை, அப்பா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஆதிரா பாண்டிலட்சுமி. இவர், சென்னை வளசரவாக்கத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது வீட்டிற்கு முன்பு திமுக பிரமுகர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் தகராறில் ஈடுபட்டதாக ஆதிரா கடந்த 7-ம் திகதி அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


ஆனால் இது தொடர்பாக காவல்துறை எதுவும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த நபர்கள் மீண்டும் வந்து பிரச்சனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆதிரா தனது ட்விட்டர் பக்கத்தில், சந்தேகத்திற்கிடமான சிலர் எதிர் வீட்டில் சுவர் ஏறுவதை தட்டிக்கேட்ட என்னையும், மகனையும் அப்பகுதி திமுக இளைஞர் அணியினருடன் சேர்ந்து சுற்றிவளைத்து தாக்கி, வீட்டில் நுழைந்து என் மகனை அடித்து கொலை மிரட்டல் விட்டார்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பு அரசு கொடுக்குமா? என்று பதிவிட்டு கேள்வி எழுப்பினார். தொடர்ந்து மற்றொரு பதிவில், “என் சொந்த வீட்டிலிருந்து எங்களை விரட்ட தொடர்ச்சியாக ஈடுபடுகிறார்கள்.. திமுகவின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க கட்சிப்பெயரை தவறாக பயன்படுத்தி பல தவறுகளை செய்கிறார்கள்.


அதில் ஒன்றுதான் இது” என்று என்று பதிவிட்டிருந்த இவர், தான் காவல்துறையில் அளித்த புகாரின் நகலையும் சேர்ந்து பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து மூன்றாவதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர், “நம்மாழ்வார் அக்குப்பஞ்சர் சிகிச்சை மையத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்ணை “இங்கு வந்தால் கொன்று விடுவேன்!” என்று மிரட்டி அங்கிருந்த பைக்குகளை அவர் மீது தள்ளும் மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் திமுக இளைஞர் அணி நபர்கள்.

அரசின் நடவடிக்கை தேவை” என்று பதிவிட்டார்.. இந்த பதிவுடன், அந்த நபர்கள் மிரட்டுவது தொடர்பான வீடியோவையும் ஷேர் செய்திருந்தார் மற்றொரு பதிவில், அதில், “லாக் டவுனில் மளிகை கடை திறந்து வைத்து வியாபாரம் பார்த்த நபரின் கடையை ஸ்குவாடு வந்து மூடினார்கள்.


வீட்டின் மாடியிலிருந்து வேடிக்கை பார்த்த என்னை ஆபாசமாக திட்ட தொடங்கினார். அதை வீடியோ எடுத்தேன். ஆபாசமாக செய்கையுடன் மிரட்டினார். இதை பாருங்கள் @mkstalin @Udhaystalin @KanimozhiDMK” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், என் வீட்டில் உள்ளே இருக்கும் என் மகனை கொல்ல துடிக்கிறார்கள். என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். அவனை விட்டுவிடுங்கள் என்று கோபத்தில் பேசுகிறேன். தாயின் துயரம் அது என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US