15 கிலோ வரை 40 நாட்களில் எடையை குறைத்த தமிழ்ப்பட நடிகை: அவர் கூறும் ரகசியம்
பிரபல தமிழ்ப்பட நடிகையான ஐஸ்வர்யா பாஸ்கரன் 15 கிலோ வரை உடல் எடையை குறைத்ததன் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
90 கிலோ எடை
1990களில் ராசுக்குட்டி, மீரா, உள்ளே வெளியே உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா பாஸ்கரன்.
அதன் பின்னர் தொடர்ந்து குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். 53 வயதாகும் ஐஸ்வர்யா, கடந்த 2018ஆம் ஆண்டு 90 கிலோ வரை உடல் எடை அதிகரித்துவிட்டார்.
இதனால் உடல் எடையை குறைக்க அவர் சில உணவுப்பழக்கத்தை மாற்றியுள்ளார்.
உணவு பழக்கம்
தாவரம் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்த ஐஸ்வர்யா, பல் பொருட்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்துள்ளார்.
மேலும் யோகா பயிற்சியையும் மேற்கொண்டதால் 40 நாட்களில் 15 கிலோ வரை உடல் எடையை குறைத்ததாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "யோகாவை முறையாக கற்றால் மீண்டும் எடை ஏறுவதற்கு வாய்ப்பே கிடையாது. நீங்கள் நினைத்தாலும் எடை ஏற விடாது. யோகா குருவிடம் சென்று யோகா கற்க ஆரம்பியுங்கள். ஆனால் யூடியூப் வீடியோ, புத்தகம் பார்த்து யோகா செய்யாதீர்கள்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |