ஒரு படத்திற்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம்! ரஜினியை மிஞ்சும் ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு
நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பானது, நடிகர் ரஜினிகாந்தை மிஞ்சும் அளவுக்கு உள்ளது. அதை பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
நடிகை ஐஸ்வர்யா ராய்
உலக அழகி பட்டத்தை வென்று ஒரே இரவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர், இயக்குநர் மணிரத்னத்தின் இருவர் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் ஆகிய படங்களில் நடித்து இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையானார்.
பின்னர், அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். குழந்தை பிறந்த பிறகும் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் ஒரு படத்துக்கு, கதாபாத்திரத்தை பொறுத்து 10 முதல் 12 கோடி ரூபாய் வரை ஊதியமாக பெறுகிறார்.
யாரும் கேட்கமாட்டார்கள் என கீழ்த்தரமான வேலையை செய்றாங்க: மன்சூர் அலிகானுக்கு எதிராக கொந்தளித்த குஷ்பு
பொன்னியின் செல்வன் படத்திற்கு மட்டும் இவர் ரூ.10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இவர், நடிகையும் தாண்டி தாயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.
ரஜினியை விட அதிக சொத்து
சினிமாவையும் தாண்டி விளம்பரங்களில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய், அதற்கான ஊதியமாய் ரூ.6 முதல் 7 கோடி வரை ஊதியம் பெறுகிறார். கல்யாண் ஜூவல்லர்ஸ், லக்ஸ், கோக கோலா, பிலிப்ஸ் மற்றும் டைட்டன் வாட்சஸ் போன்ற பல பிரபலான பிராண்ட்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
மேலும், பல நிறுவனங்களிலும் அதிகமாக முதலீடு செய்துள்ளார். ஹெல்த்கேர் நிறுவனமான பாசிபிள் நிறுவனத்தில் ரூ.5 கோடியும், சுற்றுச்சூழல் ஸ்டார்ட்அப் நிறுவனமான அம்பீயில் ரூ.1 கோடியும் முதலீடு செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஏ.பி.சி.எல்) என்ற பொழுதுபோக்கு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஐஸ்வர்யா ராய் தீவிரமாக செயல்பட்டார். பின்னர், இந்நிறுவனம் விஸ்கிராஃபட் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்தது.
முக்கியமாக, நடிகை ஐஸ்வர்யா ராயின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.776 கோடியாகும். நடிகர் ரஜினிகாந்தின் சொத்துமதிப்பு ரூ.430 கோடி எனவும் தகவல் வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |