என் அழகின் ரகசியம் இதுதான்: மேக்கப் சீக்ரெட்டை பகிர்ந்த நடிகை ஆலியா பட்
இந்தி திரைப்பட நடிகையான ஆலியா பட் ''ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்'' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, பிரபல ஆடை நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருக்கிறார் ஆலியா. தற்போது ஆலியா பட்டுக்கு, ரூ.560 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கிறது.
ஆலியா, நடிகர் ரன்வீர் இவர்களது திருமணம் கடந்த வருடம் கோலாகலமாக நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு அழகான பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஆலியா சமீபத்தில் தனது அழகின் ரகசியம் குறித்து ஒரு வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது பற்றி பார்க்கலாம்.
ஆலியாவின் மேக்கப் ரகசியம்
பெரும்பாலான பெண்கள் முகத்திற்கு பவுண்டேஷன் போடா விரும்புகிறார்கள். அனால் நான் பவுண்டேஷன் போடுவதை விரும்பமாட்டேன்.
அதற்கு பதிலாக ஸ்கின் டிண்ட்டுடன் ப்ரைமர் சேர்த்து தான் பயன்படுத்த விரும்புகிறேன். ஆனால் ஷூட்டிங் நேரத்தில் மட்டும் பவுண்டேஷன் பயன்படுத்துவேன் என்றார்.
ஸ்கின் டிண்ட் தற்போது பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அழகுசாதன தயாரிப்பாகும். ஸ்கின் டிண்ட்டுடன் பிரைமர் சேர்த்து பயன்படுத்தினால் சருமத்திற்கு பிரகாசத்தை தரும் என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்கின் டிண்ட்டுடன் பிரைமர் சேர்த்து பயன்படுத்தினால் சருமம் நல்ல ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் இது ஹைலைட்டர், ப்ரைமர் மற்றும் க்ரீமாகவும் செயல்படும் என்று கூறுகிறார்.
கன்னத்தில் உள்ள சிறிய புள்ளிகளை மறைப்பதற்கும், கண்களுக்கு கீழேயும் கிரீமி கன்சீலரைப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
கடைசியாக ஹைலைட்டர் பயன்படுத்தி பேஸ் மேக்கப்-பை நிறைவு செய்கிறார். மேலும் கண்களுக்கு அழகு சேர்க்க ஐ-ஷேடோவை உடைக்கு ஏற்றார்போல் போட்டுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
மேலும் மஸ்காரா அப்ளை செய்து விட்டு, லைட் கலர் லிப்ஸ்டிக் பயன்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |