விவோக்கோட மனைவி ரொம்ப அப்பாவி! நான் சேர்த்து வைத்த சொத்து... உருக்கமாக பேசிய சீரியல் நடிகை அம்மு
நடிகர் விவேக்குடனான நட்பு குறித்த நினைவலைகளை சீரியல் நடிகை அம்மு பகிர்ந்து கொண்டுள்ளார்.
நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று சென்னையில் காலமானார். விவேக்கின் மறைவையடுத்து அவருடனான நட்பு குறித்து பல்வேறு பிரபலங்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் சின்னத்திரை மற்றும் சினிமா நடிகை அம்மு கூறுகையில், விவேக் சார் தனது குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர்.
விவேக்கோட அப்பாவியான மனைவி, பெண் குழந்தைகளை நினைத்தால் வருத்தமாக உள்ளது. அவரோட பெண் குழந்தைகளுக்கு திருமணம் ஆகி அவரோட மகனே பிறந்து மீண்டும் வரணும் என அடிக்கடி கூறுவேன்.
ஆனால் அதை அவராலேயே பார்க்க முடியாது என நினைக்கையில் வேதனையாக உள்ளது. நான் சேர்த்து வைத்த சொத்துகளில் விவேக்கின் நட்பும் ஒன்று என உருக்கமாக கூறியுள்ளார்.