சாகும் வயசா இது? என்னால் ஏத்துக்கவே முடியல... மறைந்த மெட்டி ஒலி உமாவை நினைத்து கதறும் நடிகை அம்மு
மெட்டி ஒலியில் விஜி கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஷ்வரி உயிரிழந்த நிலையில் அவர் குறித்த நினைவுகளை நடிகை அம்மு பகிர்ந்துள்ளார்.
மெட்டி ஒலி சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் உமா மகேஸ்வரி. 40 வயதான உமா சென்னை காட்டுப்பாக்கத்தில் வசித்துவந்தார். உடல்நலக்குறைவால் பல மாதங்களாக உயிருக்கு போராடிவந்த உமா இன்று காலை மரணமடைந்தார்.
அவரின் மரணம் சக, நடிகர் நடிகைகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உமா குறித்து பேசிய நடிகை அம்மு, உமாவை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவள் தனது சோகத்தை யாரிடம் பகிர்ந்து கொள்ள மாட்டாள்.
உமாவுக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டோம். இதையடுத்து அவளிடம் கடைசியாக பேசும் போது கூட வீட்டுக்கு வாங்க என சொன்னார். சரி, உடல்நலம் சரியில்லாதவங்களை தொடர்ந்து போன் பண்ணி பேசி தொந்தரவு செய்ய வேண்டாம் என விட்டு விட்டோம்.
அவளுக்கு சாகுற வயதா ஆகுது? அவளுடைய இழப்பை ஏற்கவே முடியவில்லை என கண்ணீருடன் கூறியுள்ளார். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        